Monday, March 15
பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்றார் .
இறைவனின் பெயரால்.
நண்பர்களே பேராசிரியர் பெரியார்தாசன் : இவருக்கு அறிமுகம் தேவையிருக்காது. தமிழ் தெரிந்த அனைவருக்கும் இவரைத் தெரிந்திருக்கவேண்டும். தமிழக பகுத்தறிவு அறிவுசார் வட்டத்தில் உள்ளவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர். தன்னுடைய கருத்துக்களை மக்கள் ரசிக்கும்படியாக கிண்டல் தொனியில், வழக்கு மொழியில் எடுத்துரைப்பதில் வல்லவர். இவர் திரைப்பட குணச்சித்திர நடிகரும்கூட. இயக்குனர் பாரதிராஜா இவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்தார். கருத்தம்மா படத்தில் நடித்ததற்காக பேராசிரியர் பெரியார்தாசன் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படத்துறையில் இருந்தாலும், அத்துறையில் இருக்கும் போலித்தனங்களை வெளிப்படையாக கண்டிப்பவர். சமீபத்தில் வெளிவந்த 'திண்டுக்கல் சாரதி' திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அம்பேத்கர் எழுதிய "புத்தமும் அவர் தம்மமும்" நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அறிவுலகத்தில் இந்நூல் ஒரு கொடை.
பேராசிரியர் பெரியார்தாசன் (வெள்ளிக்கிழமை) இஸ்லாமி மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டதாகவும் சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது இது நாம் அனைவர்க்கும் தெரிந்ததே ,
மேலும் அவர் தனது பேட்டியில் உலகிலுள்ள மதக் கொள்கைகளில் கடவுளின் வழிகாட்டல்களை நேரடியாகப்பின்பற்றும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றார்.
பிறசமய வேதங்களையும் ஆய்வு செய்தவகையில் குர்ஆனைத் தவிர ஏனையவை கடவுளின் வார்த்தைகளல்ல. இதுமட்டுமே முஹம்மது நபிக்கு அருளப்பட்டதுபோன்றே இன்றும் உள்ளது என்றார்.
இஸ்லாத்தை எற்றதுக்கு பாரடுவோம் பேராசிரியர் இஸ்லாத்தை இந்தியாவிலே ஏற்று இருக்கலாம் என்பது என்கருத்து, ஏனென்றால் இஸ்லாம் ஒரு வுலக மார்க்கமாக இருந்தாலும் இந்தியாவில் ஒருசிலர் அராபிய மதம் என்று பெயர் வைத்து இருகின்றார்கள் என்பதையும் மறந்துவிட கூடாது,
அன்புடன் மஜீத் குவைத்.
சத்திய பாதையில் திருபிய அய்யாவை பாராடுவோம் வாழ்த்துவோம் வுருதுனையாக இருப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment