Showing posts with label அரபு நாட்டு இந்தியர்களுக்காக. Show all posts
Showing posts with label அரபு நாட்டு இந்தியர்களுக்காக. Show all posts

Sunday, October 9

வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் கசகசாவைப்பற்றிய விழிப்பு



மட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட சேர்க்கப்படும் கசகசா கொண்டு சென்றதற்காக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்படுகிறார்கள், இவர்களுக்கு 10 முதல் 20 வருடங்கள் வரை அங்கே சிறைத் தண்டனை என்பது தெரியுமா உங்களுக்கு?
சில சமயம் தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து ஒட்டகம் மேய்க்கும் வேலைக்காக வளைகுடா நாட்டுக்குச் சென்றார் ஓர் இந்திய இளைஞர். தனது சம்பளத்தை மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்துக்காக அனுப்பும் நோக்கில், தானே சமையல் செய்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களைக் கொண்டுபோனார். அவற்றில் அசைவ உணவுகளைத் தயார் செய்யப் பயன்படும் கசகசாவும் இருக்க, அவரை அந்த நாட்டு போலீஸ் உடனே சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு என்ன ஏதென்று எதுவும் புரியவில்லை. இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லையாம். இந்தக் கொடுமையை உங்களால் தடுக்க முடியாவிட்டாலும், இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள். இனி ஓர் இந்தியர்கூட அந்நிய மண்ணில் அறியாமை காரணமாக சிறைப்படக் கூடாது!.

இப்படி ஒரு மெயில் கடந்த வாரத்தில் வலைத்தளத்தில் வளைய வந்துகொண்டு இருந்தது. இந்தச் செய்தியை அதிர்ந்து விசாரிக்கக் கிளம்பினால் அடுக்கடுக்காக அதிர்ச்சிகள்!

முதலில் சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். ''வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை! இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது. கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக 'கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை' என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

கசகசா விவகாரம் முதலில் பெரி தாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார். அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர். கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன. இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்ட னை விதிக்கப்பட்டது!
இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார். இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார். கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது. இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள்.

நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம். கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக் கெட்டுகளில் அடைக்கப்பட்ட வாசனைப் பாக்கும்கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான். நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக் கிறார்கள்!'' என்றார்கள்.


கசகசா விவகாரத்தால், இதுவரை சுமார் 50 இந்தியர்கள் வளைகுடா நாடுகளின் சிறைகளில் வாடி வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அறியாமையைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத இவர்களை மீட்க, இதுவரை அங்கு உள்ள இந்திய துணை தூதரகம் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் கொடுமை. மூன்று வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதராக இருந்த கே.சி.சிங் என்பவர் மட்டும்தான், வளைகுடா நாடுகளை சற்று காரமாக எச்சரித்தார்.

கசகசாவைப்பற்றிய விழிப்பு உணர்வு வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் மத்தியில் போனாலும், அவர்களை இன்னொரு பொருளும் அந்நாட்டு சிறை நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கிறது. அதுதான் - கீட்டமைன் (ketamine).

சிங்கப்பூர், மலேசியா, தைவான், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிக மிக அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள் இந்த கீட்டமைன்! மாவு போன்று உப்பு வடிவில் இருக்கும் அது, இந்தியாவில்... குறிப்பாக மும்பையில்தான் தயார் செய்யப்படுகிறது. மனித மற்றும் மிருகங்களின் சிகிச்சைக்காகவும், அறுவை சிகிச்சைகளின்போது மயக்க மருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகிறது. அதுவே போதை உலகில் இப்போது 'மோஸ்ட் வான்டட்' அயிட்டமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நம் நாட்டில் ஒரு கிலோ கீட்டமைன் விலை 35 ஆயிரம் ருபாய். அதுவே, மேற்குறிப்பிட்ட நாடுகளில், கிலோ லட்சங்களில் விலை பேசப்படுகிறது. எல்லா நாடுகளிலும் அதன் குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 10 லட்ச ரூபாய். ஆனால், கசகசாவைப்போல இதிலும் இந்தியர்களுக்கு கெட்ட நேரம்தான்.

இந்திய அரசைப் பொறுத்தவரை தேவையான அங்கீகாரம் இல்லாமல் கீட்டமைன் வைத்து இருந்தால், ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கும். அதுவும் ஜாமீனில் வந்துவிடலாம். காரணம், இன்னும் கீட்டமைன், இந்தியாவில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. ஆனால், உலக நாடுகள் கீட்டமைனைக் கையாளும் விதத்தைப் பார்த்து, 'இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுக்க அதிகம் பரவுகிறது' என்ற கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பையில் நாளரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக ரெய்டு நடக்கிறது.


கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கடத்தும் தளமாக சென்னைதான் செயல்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப் பெரிய அளவில் கீட்டமைன் பதுக்கலைக் கண்டுபிடித்தது சென்னையில் இருக்கும் வருவாய் நுண்ணறிவு இயக்ககம். (Directorate of Revenue Intellegence)அதன் இயக்குநர் ராஜனை சந்தித்தோம். ''கடந்த மாதம் எங்களுக்கு வந்த ரகசியமான தகவலை அறிந்து, சில குடோன்களை சோதனை செய்யக் கிளம்பியபோது பல ஆச்சர்யங்கள்! சென்னையில் ஏழு இடங்களில் அந்த குடோன்கள் வெளிப்படையாகவே செயல்படுகின்றன. அவற்றுக்கு, மும்பையில் இருந்து கீட்டமைன் சப்ளை ஆகிறது. மொத்தம் 500 கிலோ கீட்டமைனை நாங்கள் கைப்பற்றினோம். இதன் மதிப்பு, 50 கோடி. இதன் ஆணி வேரைத் தேடிப் போனபோது, அது மும்பையில் ஆழமாகப் பதிய... அங்கு இருக்கும் போலீஸ் மூலம் கீட்டமைன் தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து சீல் வைக்கப்பட உதவினோம். உலகம் முழுவதும் இதன் தேவையை மும்பைக்குத் தெரிவிக்கிறார்கள். அதைத் தயாரிக்கும் பக்குவம் தெரிந்த நபர்கள் மும்பையில்தான் குறைந்த செலவில்தயாரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

கீட்டமைனை வெளிநாடு களுக்குக் கொண்டு போகும் நபர்கள், சாமானிய நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தான். கடத்தல்காரர்கள், இதுபோன்ற இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் சமயம் விமான நிலையத்தில் அணுகுகிறார்கள். அவர்களிடம் 'இந்த சாப்பாட்டு கேரியரை என் மச்சானிடம் கொடுத்துவிடுங்கள்' என்றோ, 'இந்த ஒரே ஒரு பாக்கெட் உப்பை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்றோ சென்டிமென்ட்டாகப் பேசி ஒப்புவித்துவிடுவார்கள். கேரியருக்குள் நேர்த்தியாக ஒரு கிலோ கீட்டமைனை வைத்துவிடுவார்கள். உப்பு பாக்கெட்டிலும் இதே கதைதான். சென்னையில் இருந்து விவரம் தெரியாமல் இதைக் கொண்டு போகும் பயணிகளில் பலரும் அங்கே மாட்டிய சம்பவங்கள் உண்டு. எங்களின் கடுமையான நடவடிக்கைகளால் இப்போது கீட்டமைன் கடத்தல் சென்னையில் குறைந்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூரில் இந்தக் கடத்தல் வழக்கில் மாட்டினால்... மரண தண்டனைதான்!'' என்றார் ராஜன்.


இப்போதெல்லாம் சென்னையில் உள்ள பார்களில் பிராந்தி, விஸ்கியைவிட கீட்டமைன் கலந்த குளிர்பானங்களுக்கு ஏக கிராக்கி என்றொரு பகீர் தகவலும் உலவுகிறது. வெளி இடங்களிலும் சாதாரணப் பெட்டிக் கடைகளில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை வாங்கும் இளசுகள் ஓசைப்படாமல் பாக்கெட்டில் மடித்துவைத்து இருக்கும் கீட்டமைனைக் கலந்து குடிக்கும் கலாசாரம் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஊருக்குள் நடமாடும் கீட்டமைனை பிடிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையாம்.


கசகசா ஏன் கதிகலங்குது???

உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது. இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது... அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது, அந்த விதைப் பையைக் கீறி... அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்... அதுதான் ஓபியம். 'பாப்பி' செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் 'பாப்பி' மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.





majeed kuwait.

Saturday, August 21

டெலிபோனில் இருந்து கணினிக்கு இனைய தொடர்பு கொடுக்க!!

இறைவனின் பெயரால்!!!


                       டெலிபோனில் இருந்து கணினிக்கு இனைய தொடர்பு கொடுக்க!!   இதன்மூலம் என்னென்ன பயன் குறிப்பாக அரபுநாட்டில் பணிபுரிவோருக்கு!! 







இனைய தொடர்புகள் என்பது அனைத்து இடங்களிலும் கிடைத்து விடும்மென்று சொல்லிவிடமுடியாது, குறிப்பாக அரபுநாடுகளில் பணிபுரிவோர் பலரின் அலுவலகத்தில் இனைய தொடர்புகள் இருந்தாலும் அவர்கள் தங்கும் அறைகளில் இணையம் பெரும்பாலும் இருப்பதில்லை.


 அந்த சூழ்நிலையில் இருபவர்கள் USP மோடம் வாயிலாக இணையதொடர்பு வைத்து இருப்பார்கள் அல்லது அவர்கள் தங்கி இருக்கும் கட்டிடத்திலேயே இனைய தொடர்பு வைத்து இருப்பார்கள் அதர்க்கு தனியாக பணம் செலுத்தவேண்டும்.


இன்டர்நெட் தொடர்பு கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது! போனில் இணையதொடர்பு வைத்து இருந்தால்.
அது எப்படி என்று பார்போம்.


அதிகம் பயன்படுத்தப்படும் NOKIA  போனை வுதாரனதிற்கு எடுத்துகொள்ளலாம்.


நோக்கியா E51



                 

தொலைபேசிக்கும் கணினிக்கும் தொடர்பை ஏற்படுத்துதல்


1,இதில் பிராட் பேண்ட் இணையம் வழங்கும் நிறுவனத்தை அணுகி குறைந்த மாதந்திர சந்தா செலுத்தக்கூடிய unlimitet data sim சிம் கார்டை வாங்கி போனில் பொருத்தவும்.


ப்ளூடூத் மற்றும் கேபிள்(Bluetooth or Data cable)இதில் எதில் வேண்டுமானாலும் இணைக்கலாம்.இப்போது கேபிளால் இணைப்பதை பார்போம்.


டெலிபோனில் data sim பொருத்தியபிறகு கீவரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்.


1,போனில் menu + tools +settings + connection சென்று    packet data என்பதினை தேர்வு செய்யவும்.இதில்   packet data connecti.... என்பதில் when needed   தேர்வு செய்யவும்.
Access point என்பதில் அவர் அவர் நாட்டிற்கு தகுந்தல்போல்.
குவைதாக இருந்தால் wataniya data லைன் வைத்து இருபவர்கள்.wwwAction.wataniya.com என்றும். இந்தியாவில் TATA. நிறுவனத்தின் சிம் பயன் படுத்துபவர்கள் TATA.DOCOMO.INTERNET என்று எழுதவேண்டும்.high speed packet ac....   என்பதில் Enabled தேர்வு செய்யவும்.  அவ்ளோதான் போனில் பண்ண வேண்டிய செட்டிங்க்ஸ் முடிந்து விட்டது இனி கணினியுடன் இணைப்பதை பார்போம்.


2,Install the PC suite software. போன் வாங்கும்போது அதில்இருக்கும் டிஸ்க்(PC suite software) கணினியில் நிறுவிக்கொள்ளவும்(கைவசம்PC suite software இல்லையென்றால் இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்)









2, போனையும் கணினியையும் கேபிளால் இணைக்கவும்.




இப்போது கணினியின் திரையில் இருக்கும் nokia PC suite iconனை கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் திறக்கும். 

settings என்பதினை கிளிக் செய்து add more  phones தேர்வு செய்தால்  கீழ் இருபதைபோல் விண்டோ திறக்கும்.


  
இதில் next  என்பதினை தேர்வு செய்யவும்.




இதில் cable connection என்பதினை தேர்வுசெய்து next குடுத்தால் இணைப்பு செய்த  போனின் பெயர் தெரியும்  கீழே இருபதைபோல் . 


இப்போது ரைக்ட் என்று இருப்பதில் கிளிக் செய்யவும்.இப்போது போனும் கணினியும் இணைந்து விட்டது.


இப்போது இனைய தொடர்பு குடுப்பதை பார்போம்.

மறுபடியும் கணினியின் திரைக்கு செயன்று நோக்கியா  Nokia PC Suite icon னில் கிளிக் செய்து வரும் விண்டோவில் connect to internet (வுலகபடம் வரைந்து இருக்கும் icon)னில் கிளிக் செய்யவும் கீழே பார்க்கவும்.


 அல்லது சுருக்கமாக quick launch barரில் தெரியும் போனின் iconனை கிளிக் செய்தும் திறக்கலாம் கீழே பார்க்கலாம்.





connect to the internet சென்றதும் கீழ் இருபதைபோல் ஒருவிண்டோவ் திறக்கும்.
"One Touch Access".



இதில் ஸ்பேனர்(Configure icon) வரைந்து இருக்குமிடத்தில் கிளிக் செய்தால் கீழே இருபதைபோல் வரும்.


.
select modem என்ற இடத்தில் நமது போனை(phone) 
தேர்வு செய்து  next குடுக்கவும்



இதில் select network operator என்ற இடத்தில் நமது சிம் கார்ட் நிறுவனத்தின் பெயரை தேடுங்கள்.(வுலகத்தில் இருக்கும் அணைத்து நாடுகளில் சிம் கார்ட் வழங்கும் டெலிகாம் நிறுவனத்தின் பெயர்கள் இருக்கும்)
அல்லது configure the connection manually என்ற இடத்தில் சொடுக்கவும்.


இதில் அவர் அவர் நாட்டிற்க்கு தகுந்தாற்போல் எழுதவேண்டும்
வுதாரனதிற்கு இரண்டுபார்போம்.
குவைத்தில் அதிகம் நபர்கள் பயன் படுத்தும் wataniya சிம் வைத்து இருந்தால் http://www.action.wataniya.com/ என்றும் இந்தியாவில் டாட்டா நிறுவனத்தின் சிம் வைத்து இருபவர்கள்  TATA.DOCOMO.INTERNET என்றும் குடுத்து ரைட் குடுத்துவிடவும் அவ்ளோதான் வேலைமுடிந்தது இப்போது இணைப்புகுடுக்கவேண்டியதுதான். இப்போது மறுபடி "One Touch Access". வரவும்.
கீழே பார்க்கவும்.






 
connect என்பதில் சொடுக்கவும்.



இப்போது டெலிபோனில் இருந்து கம்ப்யூட்டறுக்கும் மோடம்(modem)இல்லாமல் phone னையே மோடம்மாக அற்புதமாக மாற்றி இணையத்தில் எந்த சிரமமும் இன்றி வுலாவலாம்.(இணைய தொடர்பு குடுக்கும் போது phone னை ஜார்ஜிலையே வைத்து இருங்கள் இல்லையென்றால் பேட்டரி சிக்கிரம் குறைந்து விடும். இதனால் போனுக்கோ பேட்டரிகோ எந்த கெடுதலும் வராது)

அனைத்து சிம் கார்ட்லேயும் இனைய தொடர்பு குடுக்கமுடியும் என்றாலும்  data sim மூலம் பயன் படுத்துவதே சிறந்தது இல்லையென்றால் வுங்கள் பணம் நொடியில் காலியாகிவிடும்.

modem இல்லாமல் போனையே மோடமாக பயன் படுத்துவதால் என்ன பயன்.
நமக்கு வரும் இமைல்களை வுடனுக்குவுடன் பார்க்கலாம் சாட் செய்யலாம்
  இனைய  தொடர்புடன் போனை கையிலேயே வைத்து இருப்பதால் கணினியில் செய்யவேண்டிய பாதிவேலைகளை கணினி இல்லாமலேயே செய்துவிடலாம்.

அதோடுமட்டும் இல்லாமல் தாயகத்தில் இருந்து பணிநிமித்தமாக வெளிநாட்டில் இருபவர்கள் தாயகத்துக்கு call செய்யும் வசதியும் எர்படுதிகொள்ளலாம்.
இதில் ஒரு அறையில் இருக்கும் நண்பர்கள் சேர்ந்து நடத்தலாம் இதனால் மிக குறைந்த விலையில் தாயகத்தில்  இருக்கும் சொந்தங்களிடம் பேசலாம்.

டெலிபோனில் இன்டர்நெட் call மிக குறைந்த விலையில் தரும் பல நிறுவனங்கள் இருகின்றன அதில் ஒன்ற மட்டும் இங்கு தருகிறேன் zone fone என்று சொல்லகூடிய இத்தளம் செல்ல இங்கு 
மற்றும் இங்கு சென்று 100 US(pay pal) டாலர் செலுத்தினால் 7000 நிமிடம் இந்தியாவுக்கும் 1300 நிமிடம் இலங்கைக்கும் அரபுநாட்டில் இருந்து பேசலாம். 

முக்கியமான விஷயம் இன்டர்நெட் டெலிபோன் ஒரு அறையில் இருக்கும் நண்பர்கள் இணைந்து நடத்துவதால் யாதொரு கெடுதலும் இல்லை ஆனால் வியாபார நோக்கத்தோடு இதை நடத்தினால் அரபுநாடுகளில் இதற்க்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கும் வியாபார நோக்கத்தோடு இதை நடத்தினால் வுங்கள் அரபு நாடு வாழ்கையே முடிவிற்கு வந்து விடும்.

எனவே சட்டத்திற்கு வுட்பட்டு  பயன் தரக்கூடிய இந்த வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள் ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கலாம்.


மஜீத் குவைத்.

























Wednesday, July 28

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு?

இறைவனின் பெயரால்!!!  

                                                             "வேண்டமே விஷ பருச்சை"
     
                                           
வெளிநாட்டில் வேலை இது பலரது ஆசை,கனவு.நல்லதுதான் ஆனால் அந்த வெளிநாட்டில் வேலை,வாழ்கையில் வெற்றி என்ற கனவை நனவாக்க முறையாக போராடவேண்டும்.


 ஒருசிலர் எப்படியேனும் பணம் சம்பாதித்து குறுகிய காலத்தில் பணக்காரர்களாக ஆகிவிடவேண்டும் என்று  சிலரின் தவறான வழிகாட்டலால் அதன் விபரீதம் புரியாமல் வந்து மாட்டி கொள்கின்றார்கள்.




பொதுவாக நாம் பணிக்காக செல்லும் முதலாளித்துவ நாடுகளில் சட்டங்கள் மிகவும் கடுமையானதாகவே இருக்கும்.

 அங்கு   இருக்கும் நமது தூதரகங்களும் நமக்கு பிரச்சினை வரும்போது சொல்லிகொள்ளும் அளவிற்கு அதிகமாக நமக்கு வுதவாது.




குவைத்தில் 25-07-2010 அன்று இந்தியாவை சேர்ந்த ஒருவரும் ஈரான் நாட்டை சேர்ந்த இருவருமாக மொத்தம் மூன்று நபர்களை குவைத் போதைபொருள் தடுப்பு பிரிவினர் (Drug Control General Department) கைது செய்து இருகின்றார்கள்
.


                                                                 held in drug trafficking


ஈரானியர்கள் இருவரும் போதை மருந்தை(drug) மக்களிடம்
விற்பனை செய்ததற்காகவும்,இந்தியர்  போதை மருந்தை இராக்கில் இருந்து குவைத் கொண்டு வந்து இவர்களிடம் மொத்தமாக விற்பனை செய்ததற்காகவும்(who allegedly smuggles drugs from Iraq) கைது செய்யப்பட்டு இருகின்றார்கள்.  

குறுகிய காலத்தில் எப்படியேனும் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற இவருடைய தவறான சிந்தனைகள்மூலம் தவறான வழிமுறையை தேர்ந்து எடுத்த இவர் தர்போது மரணத்தின் விழிம்பில் இருக்கின்றார்.

இந்தியருக்கு  தூக்குதண்டனை குடுக்கப்பட இருக்கிறது !(Indian confessed that he purchased 10 kilograms of opium from Iraq recently and he is trading in drugs on behalf of an inmate at the Central Jail). 

நமது நாட்டில் சாதரணமாக நாம் செய்யும் தவறுகள் பணக்கார நாடுகளுக்கு பணிநிமித்தமாக வந்திருக்கும்போது  செய்தால் ஆபத்தில்தான் முடியும்.

வுதாரனமாக சிங்கப்பூரில் குடித்துவிட்டு வாகனம்


ஓட்டியவருக்கு குடுக்கும் தண்டனையை வீடியோவாக கீழே தந்து இருகின்றேன் பார்க்கவும்




  சிங்கப்பூரில் இந்த தண்டனைகொடுப்பது  நாம் அனைவருக்கும் தெரியும்.அந்த அடியின் வீரியம் எத்தகையது என்று பதியவிட்டு இருகின்றேன் பாருங்கள்.

இதயம் பலகீனமானவர்கள் பார்க்கவேண்டாம்.




பணம் சம்பாதிக்க வெளிநாடுசெல்லும்நாம் சம்பாதிக்கின்றோமோ   இல்லையோ  நல்லபடியாக தாயகம் திரும்ப வேண்டும் என்றால் எந்த நேரத்திலும் தவறான பாதையில் போகமாட்டேன் என்ற வுறுதியுடன் வருவதுதான் சிறந்தது.





அரபுநாடுகளுக்கு செல்ல வேலைதேடிகொண்டு இருபவர்களுக்கு பயனுல்ல இணையதளங்களை தந்து இருந்தேன் பார்க்காதவர்கள்(வேலை தேடுபவர்கள்) இங்கு கிளிக் செய்து பார்க்கவும் மிகவும் வரவேற்பை பெற்ற பதிப்பு.

அந்தபதிப்பை தந்து ஒருவாரம்கூட ஆகவில்லை பல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வருவதாக என்னிடம் தெரிவித்து இருகின்றார்கள்.



 
A R Rahman - TamilWire.com - Oruvan Oruvan .mp3
Found at bee mp3 search engine
மஜீத் குவைத்.

Tuesday, July 20

அரபுநாடுகளுக்கு செல்ல வேலைதேடுபவரா நீங்கள்?

இறைவனின் பெயரால்!!!!

Annamalai - Vetri Nichayam .mp3
Found at bee mp3 search engine


                             
                                        "வாய்புகள் எந்தவழியிலும் வரலாம்"

    பலர் வெளிநாடிற்கு செல்ல ஆசைபடுகிறோம்,அதுவும் கல்லூரியில் படித்த மாணவனாக இருந்தால் படிப்பு முடிந்து சிலமாதங்களில் வேலைக்கு செல்லவில்லை என்றால் பலரது ஏளன பார்வைக்கு ஆளாகின்றனர் ,


பேப்பரில்  வரும்விளம்பரங்களை பார்த்து அல்லது ஏதேனும் தரகர்களிடம்,
ஏஜெண்டுகளிடம் ,சரணாகதி ஆஹி ,ஒரு லட்சம் இரண்டு லட்சம் கொடுத்து வெளிநாடு வருகின்றனர் அதில் தொண்ணுறு சதவிதம் சொன்னவேளை ஒன்று ,இங்கு கொடுத்த வேலை ஒன்றாக போக நொந்து போகின்றார்கள்.


 வெளி நாட்டில் நல்ல வேலையும் கிடைக்க வேண்டும் அதே சமயம் பண விரயமும் அகக்குடாது!


இனைய தலத்தில் நமக்கு இலவசமாக வேலைதேடி தருவதற்கென்றே      பல அற்புதமான நிறுவனகள் இருகின்றன அந்த தளங்களின் முகவரிகளை இங்கு வரிசையாக தருகின்றேன்.


 நிங்கள் செய்ய வேண்டியது இந்த முகவரிகளுக்கு சென்று அவர்கள் கேட்டிருக்கும் வுன்களை பற்றிய தகவல்களை குடுகவேண்டியதுதான்


 வுதாரனமாக என்ன வேலை வேண்டும் வுங்கள் தகுதி என்ன,வுங்கள் விலாசம் மற்றும்வுங்கள் பயோடேடா ,இமெயில்,டெலிபோன்என்,

இப்படியாக சில!ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து விடீர்கள் என்றால் வுங்கள் மெய்லுக்கு(mail) எங்கு வேலை இருக்கிறதோ தெரியபடுத்தி கொண்டே இருப்பார்கள்.


வுங்கள் சார்பாக அவர்களே அந்த கம்பனிகளை தொடர்பு கொண்டு வுங்க (ரிஸ்யம்)பயோடேடாவை  அனுப்புவார்கள்.


 பலவகைகளில் நமக்கு  வேலை கிடைக்க வுதவியாக   இருப்பார்கள்,இதற்கு நாம் ஒருருபாய் கூட கொடுக்க வேண்டியது இல்லை.

 நான் கீழே தந்து இருக்கும் இந்த இணைய தளங்களால்  பல  பேருடையவாழ்கையில் விளக்கு ஏற்றிருப்பது வுண்மை.





al jazeera  இங்கு கிளிக் செய்யவும்.               




2






alumni0net இங்கு கிளிக் செய்யவும்



3






aarvi encon  இங்கு கிளிக் செய்யவும்.





4

monster gulf இங்கு கிளிக் செய்யவும்.





5

GN Jobs4u இங்கு கிளிக்செய்யவும்.




6


indeed இங்கு  கிளிக் செய்யவும்.




7

naukri  gulf இங்கு கிளிக் செய்யவும்.




8



Time jobs.com இங்கு கிளிக் செய்யவும்.




9



 
wozeef இங்கு கிளிக் செய்யவும்.





9







bayt.com   இங்கு கிளிக் செய்யவும்.





10






oil careers .com இங்கு கிளிக் செய்யவும்.





11





TECHGIG.com  இங்கு கிளிக் செய்யவும்.




12









jobcirele  இங்கு கிளிக் செய்யவும்.



13







Gulfpersonnel .com  இங்கு கிளிக் செய்யவும்.



14

GULF TALENT இங்கு கிளிக் செய்யவும்




 ஒரு படம் பார்க்க கூடிய நேரமே செலவாகும்,இத்தளங்களை பூர்த்தி செய்ய!எனவே  சோம்பேறி தனத்தை வுதரி விட்டு இவைகளை கவனம் செல்தவும்.வெற்றிகளை  குவிக்கவும்.






www.123musiq.com - � Riya coll .mp3
Found at bee mp3 search engine








                       
                              "முயற்சிகள் தோற்கலாம்! முயற்சிக்க தோற்கலாமா!!"




  best "regards" maeed  NRI KUWAIT .

Thursday, July 1

வளைகுடாவில் இந்திய முஸ்லிம்களின் நிலை..

ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு வீடியோ

(வெளிநாடில் வேலை??) July 4 TNTJ Chennai ஜூலை 4,2010 சென்னை தீவு திடலில் TNTJ யின் உரிமை மீட்பு போராட்டம்

இறைவனின் பெயரால்!!!
               ( இந்த படத்தை எனக்கு அனுபிவைத்த நஜுமுதீன் அவர்களுக்கு நன்றி)


ஜூலை 4 - சென்னையில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் போராட்ட மாநாடு,,,

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் சிந்திய ரத்தத்திற்கு ஏது ஈடு?
அந்தச் சமுதாயத்திற்கு இதுவரை இடஒதுக்கீடு தராதது வெட்கக் கேடு.
இனியும் தொடரலாமா இந்த மானக்கேடு.
ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு கோரி
சிங்கங்களாய் கர்ஜிக்க சமுதாயத் தங்கங்களே!
இப்போதே தயாராவீர்! பயணத்திற்கு முன்பதிவு செய்வீர்,


2.
இந்திய விடுதலைக்கு முஸ்லிம்கள் சிந்திய ரத்தம் நூறு விழுக்காடு
இதற்குத் தண்டனையாக இந்திய அரசு பறித்தது நமது இடஒதுக்கீடு
இந்த அநியாயத்திற்கு முடிவு கட்டும் விதத்தில்
இரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி
டி.என்.டி.ஜே. நடத்தும் ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு


நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை.
மஜீத் குவைத்.

Monday, June 14

பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் கவணிக்கவேண்டியவை?(online indian Passport Office

இறைவனின் பெயரால்!!!
  நண்பர்களே தற்போது பாஸ்போர்ட்(passport) எடுக்க எந்த இடைதரகரும் இல்லாமல் நாமே ஆன்லைனில் பாஸ்போர்டுக்கு விண்ணபிக்கலாம் ,இப்படி நாமே நேரிடையாக வின்னபிப்படால் எளிதில் கிடைபதோடு மட்டும்மல்லாமல் பணமும்  மிச்சபடுத்தலாம்,

 என் பழைய பதிப்பில் ஏற்கனவே இது பற்றி எழுதி இருந்தாலும் சில நண்பர்கள் எப்படி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வது என்று கேட்டு இருந்தார்கள் அவர்களுக்காகவே இந்த வெளியிடு.

 இந்திய அரசாங்கத்தின்  அதிகார பூர்வ பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்  வலை தலமாகிய இத்தளத்தில் கிளிக் செய்தால் கிழே வுள்ள படத்தி வருவதை போல் ஒரு தளம் திறக்கும்.
 இதில் இடது பக்கம் கிழே நான் மார்க் செய்து இருக்கும் இடத்தில் கண்டினிவ்(Continue)என்று இருக்கும் இடத்தி சொடுக்கவும்,சொடுக்கியவுடன் நீங்க பூர்த்தி செய்யவேண்டிய பாஸ்போர்ட் விண்ணப்ப படிவம்  காட்சிதரும் கீழே இருபதைபோல்.
இந்த  விண்ணப்ப படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்று பாப்போம்,,,,,
passport office  ............ என்ற இடத்தில் வுங்களுக்கு அருகாமையில் வுள்ள பாபோர்ட் அலுவலகத்தை தேர்ந்து எடுக்கவும்,

District:.......... உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்

Service Desired:,,,,,,,, என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname ...........: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)

First Name: ,,,,,,,,,,,,உங்களது பெயர்

உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து

Previous Name :,,,,,,,,,,,,,, உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்

Sex: ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்

Date of Birth:,,,,,,,,,,,,,,,, பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)

Place of Birth:,,,,,,,,,,,,,,, பிறந்த ஊர்

District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்

Qualification:,,,,,,,,,,,,,,,,,,,, உங்களது படிப்பு

Profession:,,,,,,,,,,,,,,,,,,,,,,, தொழில்

Visible Mark:,,,,,,,,,,,,,,,,,,,,,, உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)

Height (cms):,,,,,,,,,,,,,,,,,,,,, உயரம்

Present Address:,,,,,,,,,,,,,,, தற்போதைய முகவரி

Permanent Address:,,,,,,,,,,,,, நிரந்தர முகவரி

Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை

Phone No: ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,தொலைபேசி எண்

Mobile No :,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மொபையில் எண்

Email Address: ,,,,,,,,,,,,,,,,,,,,இமெயில் முகவரி

Marital Status:,,,,,,,,,,,,,,,,,,,,, திருமணமான தகவல்

Spouse’s Name: ,,,,,,,,,,,,,,,,,,கணவர்/மனைவியின் பெயர்

Father’s Name:,,,,,,,,,,,,,,,,,,,, தந்தை பெயர்

Mother’s Name:,,,,,,,,,,,,,,,,,,,, தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்

Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்

Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)

Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

( * இப்படி நச்சத்திர குரிவுள்ள கட்டங்கள் கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும்)

அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
■ரேசன் கார்டு

■குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

■தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

■மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

■கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

■வாக்காளர் அடையாள அட்டை

■வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)

■துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)
■1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்

■பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்

■கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்
■10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

■உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

■பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா… நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்… கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

இப்போது நான் எழுதி இருக்கும் வழிமுறைகளை அரசாங்க இணைய தளத்தின் மூலம் பார்க்க விரும்புபவர்கள் இங்கு கிளிக் செய்து ஆங்கிலத்தில் பார்க்கவும் இன்னும் அதிக தகவல்கள் தெரிந்து கொல்லலாம்.

தொடக்கத்திலேயே பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் தளம் தந்து இருந்தேன் மேலே செல்ல கஷ்டமாக இருக்குமெனில் இங்கு கிளிக் செய்து  ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்.

 (என் பழைய பதிப்பிலும் ஆன்லைனில் பாஸ்போர்ட் எடுக்க(online indian Passport Office)  எழுதி இருந்தேன் பார்க்க நினைபவர்கள்  இங்கு கிளிக் செய்து பார்க்கவும்)
மஜீத் குவைத்.

since 23-07-2010

free counters