பெய்ஜிங்: உலகிலேயே குள்ளமான மனிதர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த சீனாவைச் சேர்ந்த ஹீ பிங்பிங் தனது 23வது வயதில் இத்தாலியில் மரணமடைந்தார்.
பிங்பிங்கின் உயரம் 2 அடி 5.37 அங்குலம் ஆகும். கடந்த 1988ம் ஆண்டு சீனாவில் பிறந்தவர் பிங்பிங். 2008ம் ஆண்டு உலகிலேயே குள்ளமான மனிதர் என்று கின்னஸ் சாதனைப் புத்தக நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து உலகம் முழுவதும் பிரபலமானார் பிங்பிங். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். சமீபத்தில் ரோம் நகரில் நடைபெற்ற டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
பிங்பிங் குறித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தக ஆசிரியர் கிரேக் கிலென்டே கூறுகையில், அனைவருக்கும் ஆதர்சமான மனிதராக திகழ்ந்தவர் பிங் பிங். சிரித்த முகத்துடன் இருப்பார். அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதையே விரும்புவார். அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. சவால்களை திறமையுடன் சந்தித்தவர் பிங் பிங் என்று புகழாரம் சூட்டினார்
No comments:
Post a Comment