Thursday, March 18

குவைத் பற்றிக் சில தவல்கள்,


தலைநகரம்> ............................. குவைத் city

ஆட்சி மொழி>......................... அரபு

மக்கள் >.....................................குவைத்தி

 அரசியலமைப்புசட்ட>........ முடியாட்சி

அமீர்>........................................... சபா அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா

 பிரதமர்>.................................... நாசர் அல்-முகமது அல்-அகமது அல்-சபா

விடுதலை >.............................. ஐக்கிய இராச்சியம் இடம் இருந்து ஜூன் 19, 1961

பரப்பளவு >................................ மொத்தம் 17,818 கிமீ² (157வது)6,880 சது. மை

 நீர்>............................................... (%) சிறிய பகுதிகள்

மக்கள்தொகை >...................2006 மதிப்பீடு 3,100,000[2] (தகவல் இல்லை)

அடர்த்தி>................................... 131/கிமீ² 339/சதுர மைல்

நாணயம்>.................................. குவைத்தி தினார் (KWD)

நேர வலயம்> ......................... AST (ஒ.ச.நே.+3)

இணைய குறி> ........................kw

தொலைபேசி>..........................+965
1. உலகின் அதிகமான மதிப்புள்ளது குவைத் தினார் (ரூ.160)1000ஃபில்ஸ் = 1தினார்


2. குவைத்தில் பெட்ரோல் 1 லிட்டர் 60ஃபில்ஸ் (ரூ 9.60)

3. மினரல் வாட்டர் 1 லிட்டர் 150ஃபில்ஸ் (ரூ24)

4. உள்ளூர் தொலைபேசி, தொலைநகல், - இலவசம்.

6. உள்ளூர் கைத்தொலைபேசி 1நிமிடம்- 20ஃபில்ஸ் (ரூ 3.20)

7. இரண்டு அறை, ஹால், கிச்சன் அடுக்குமாடி ஃப்ளாட் மாத வாடகை தினார் 175-250

8. உலகத் தொலைபேச 1 நிமிடம் ஃபில்ஸ் 160 (ரூ 26)

9. ஸ்கூல் ஃபீஸ் ஒரு குழந்தைக்கு மாதம் தினார் 50/-

10. மாதாந்திர ரீஸனபிள் வீட்டுச் செலவு for 2 + 2 family size தினார் 75-100

11. இரண்டாண்டுகள்(40-60,000) பயன்படுத்திய 2.0 எஞ்ஜின் கார் 2500-3000 தினார் மாத தவணை எனில் 80 தினார்.

12. 24மணி நேர Water supply- இலவசம்.

13. மின்சாரம் 1 யூனிட்க்கு 2ஃபில்ஸ் ( 32 பைசா மட்டும்) மத்திய குளிரூட்டப்பட்ட ஃப்ளாட்க்கு மாதம் 5 தினார் (ரூ 800/-) ஆகும்.

குவைத்தில் வேலை செய்வதில் உள்ள பலன்கள்;
வேலைக்கு வர,அநாவசியமாக TOEFL இன்ன பிற சொல்லணா இன்னல்கள் இல்லை. நம்மக்களில் 50-70% மதிப்பெண்கள் பெற்றுத்தேறிய நபர்களுக்குச் சோலைவனம்.


தொழிற்படிப்பும் (முறையான) , ஐந்து முதல் பத்தாண்டு தொழில் அனுபவம் இருப்பின் சுமார் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை 100% tax free சம்பளம் கிடைக்கும்.

பெண்கள் கறுப்புஅங்கி அணிய அவசியமில்லை. இந்தியப் பரம்பர்ய,மாடர்ன் உடைகள் அணிந்து வலம் வரலாம். தடையில்லை.

பெண்கள் கார் ஓட்டலாம்.

பெண்கள் வேலைக்குப் போகலாம்.

தாங்கள் "குடி"மகனாக இருந்தால் மனம் திருந்தி, திருந்திய குடிமகனாவதற்கு நல்ல சந்தர்ப்பம்,

நீங்கள் ஒரு சூதாட்டப்பிரியர் எனில் அதனின்று விடுபட நல்ல சந்தர்ப்பம்!
இந்து மதம் சார்ந்தவர்கள் கடவுள் photos, சிறிய அளவிலான பூஜை விக்கிரகங்கள் எடுத்து வந்து வீட்டில் வைத்து வழிபடலாம் (குவைத்தில் இந்தியர்களை, ஹிந்துக்களை தனித்துஅவமதிக்கும்படி Customs check செய்வதில்லை, நமது பாரம்பர்ய பட்டுச்சேலை அணிந்து வந்தால், 95% Green channel மாதிரி x-ray scan roller -ல் பெரும்பாலும் திறக்காமலேயே பெட்டிகளை எடுத்து வந்துவிடலாம்,

ஹிந்து மதச்சின்னங்களை பெண்கள் வெளிப்படையாக அணிந்து கொள்ளலாம்.

ஆண்கள் வேலை நேரம் தவிர்த்து ஹிந்துமதச்சின்னங்களை (விபூதி,சந்தனம்-குங்குமம்) அணிந்து கொள்ளலாம் (சிலர் கேள்விகள், வெறுப்புப் பார்வை பார்க்கலாம், என்றாலும் இது முடிகிறது)

இறுதியாக, இங்கு எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் Greencard, Citizenship கிடைக்காது, எனவே தாங்கள் கண்டிப்பாக தாய்நாடு திரும்புவீர்கள்(ஓரளவு பணத்துடனும், ஓரளவுக்கு (பக்குவப்பட்ட) மனதுடனும்) இந்தியாவிற்கும் பயன்படுவீர்கள்!




வரலாறு;
 குவைத் 18ஆம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. அரபியர்கள் அந்தக் காலகட்டத்தில்தான் அந்தப் பகுதிக்குள் நுழைந்து குடியேறத் தொடங்கினர். மீன் பிடித்தலிலும் முத்துக் குளிப்பதிலும் ஈடுபட்டு வணிகத்தில் ஈடுபட்டனர். 1756இல் அல்சபா எனும் குழு இனம் வலிமையானதாக வந்தது. அவர்களே ஆட்சியாளர்களாகக் கருதப்பட்டனர். 1899இல் குவைத்தைக் காப்பாற்றும் பொறுப்பை பிரிட்டன் ஏற்றுக் கொண்டது. 1937இல் குவைத்தில் மிகுந்த எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், அபரிமிதமான எண்ணெய் செல்வத்துடன் நாடு வளர்ச்சி அடையத் தொடங்கியது. 1961 ஜூன் 19 இல் குவைத் விடுதலை அடைந்தது. 1980இல் நடந்த ஈரான்-ஈராக் போரில், ஈராக்குக்கு குவைத் ஆதரவு அளித்தது. ஆனாலும் 1990 ஜூலையில் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் அமைப்பில் குவைத் மீது ஈராக் புகார் கூறியது. ஈராக்குக்குச் சொந்தமான எண்ணெய்க் கிணறுகளில் குவைத் எண்ணெயைத் திருடி எடுப்பதாகவும் அதனைத் தடுக்க ராணுவ நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் ஈராக் கூறியது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈராக் படையினர் குவைத் மீது படையெடுத்துப் போரிட்டு குவைத்தைத் தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டனர். 1991 பிப்ரவரியில் அய்.நா. ஆதரவுடன் அமெரிக்கப் படைகள் ஈராக்குக்கு எதிராகப் படையெடுத்து குவைத் நகரை அடைந்தன. ஈராக்கியப் படைகள் பின்வாங்கிச் சென்றன. செல்லும் வழியில் 742 எண்ணெய்க் கிணறுகளுக்குத் தீ வைத்துவிட்டது. மொத்தமே 1080 கிணறுகள் நாட்டில் இருந்தன. அவற்றின் கச்சா எண்ணெய் கடலிலும் பாலை நிலத்திலும் வழிந்தோடச் செய்தன. 1993இல் அய்.நா. தலையீட்டில் ஈராக்குக்கும் குவைத்துக்கும் புதிய எல்லைக் கோடு நிர்ணயிக்கப்பட்டது. ஈராக்குக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடைப்பட்ட நாடான குவைத் 17 ஆயிரத்து 820 சதுர கி.மீ. பரப்புள்ளது. 25 லட்சம் மக்கள் தொகை கொண்டது. 85 விழுக்காட்டினர் முசுலிம்கள். இவர்களில் 70 விழுக்காட்டினர் சன்னி பிரிவிலும் 30 விழுக்காட்டினர் ஷியா பிரிவிலும் உள்ளனர். ஆட்சி மொழியாக அரபி உள்ளது. 84 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். குடிக்கோனாட்சி முறை நிலவும் நாடு. அரசர்கள் அதிபர்கள். ஆட்சித் தலைவராக பிரதமர் உண்டு. இவர்களும் மன்னர் வம்சமான ஷேக் பிரிவினர்தான். இங்கேயும் வேலை கிட்டாதவர்கள் 2 விழுக்காட்டுக்கு மேல் உள்ளனர். 3 ஆண்களுக்கு இரண்டு பெண்கள் வீதம் உள்ளனர். 
உபரித் தகவல்கள்:
 

No comments:

since 23-07-2010

free counters