Friday, July 16

‘எந்திரன்’ ரிலீஸ்"சுவாரசியம்"வீடியோ&போடோ(video songs)


எந்திரன் படத்தின் வீடியோ பாடல்களையும் மற்றும் படபிடிப்பு நடந்தபோது சில சுவாரஸ்யங்களும் வீடியோவாக பார்க்க வேண்டும் என்றால் இங்கு   கிளிக் செய்து எந்திரன் சம்மந்தமாக முழுவதும் வீடியோவாக பார்க்கலாம். திறந்ததும் வீடியோவை ஆண்செய்து கீபோர்டில்(Keyborad) "F11" சொடுக்கவும் திரைஅரங்கில் அமர்ந்து இருக்கும் வுணர்வு கிடைக்கும்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ்
 தயாரிப்பில் AR ரகுமான் இசையில்  இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்திரன்
படப்பிடிப்பு முடிந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம். மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளதாம்.

இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் நடந்தது. ரஜினி, ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமானது.


எந்திரன் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் ரிலீசாகும் என்று எதிர் பார்க்க படுகின்றது. அல்லது
 
வருகிற தீபாவளி திருநாளுக்கு படம் திரைக்கு வரலாம் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை.

 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் பிரமாண்டமான முறையில் வருகிற 31ம் தேதி நடைபெறவுள்ளது.

சென்னையிலும் ஆடியோ ரிலீஸ் இருக்குமாம்.

இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமானதாக ஆடியோ விழாவை திட்டமிட்டுள்ளனராம்.

கோலாலம்பூரில் நடைபெறும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மருமகளும், எந்திரன் பட நாயகியுமான ஐஸ்வர்யா ராய் உள்பட இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலரும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஹாலிவுட் ஸ்டார் யாராவது கிடைத்தால் அவர்களையும் அழைத்து வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

 உலகளாவிய அளவில் எந்திரன் படத்தை" எச்பிஓ"  நிறுவனம்தான் திரையிடுகிறது.

இதுவரை படத்திற்கான செலவு ரூ.190 கோடியைத் தாண்டியுள்ளதாம்.

தமிழகத்தில் 500 தியேட்டர்களில் படத்தை திரையிடவுள்ளனர். 

உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

 ஸ்பைடர் மேன் படத்துக்குப் பின்னர் ஒரு படம் இந்த அளவுக்கு அதிக தியேட்டர்களில் திரையிடப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

படத்திற்குப் பிரமாண்டமான எதிர்பார்ப்பு உள்ளதால் அதற்கேற்ற வகையில் விளம்பரமும் இன்ன பிறவும் இருக்கும் என தெரிகிறது

பலமாதத்திற்கு  முன்பஇப்படத்தில் பாடல்கள் இணையதளங்களில்
வெளியிடப்பட்டுவிட்டது என்பது கூடுதல் தகவல்.

எந்திரன் திரைப்படம் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் இங்கு கிளிக் செய்து பார்க்கவும் இப்படம் தொர்பாக 
அணைத்து விஷயங்கலும் வுங்களுக்கு கிடக்கும் போடோஸ் வுல்பட.
மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters