இறைவனின் பெயரால்!!!
நண்பர்களே அடுத்த ஆண்டு முதல் கார்கள் வானத்தில் பறப்பதை காணலாம்,ஆம் அமெரிக்காவின் பிரபல நிறுவனமான டெராப்யூஜி யாஸ் என்னும் நிறுவனம்,terrafugia என்ற பறக்கும் காரைத் தயார் செய்து இருக்கின்றது .இதன் வுலக விற்பனைக்கு அனுமதியும் வாங்கிவிட்டது.
இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், வீதியில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது மடிக்கப்பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும்.சாதாரணமாக ரோட்டில் இருந்துகூட பறக்கமுடியும் அதிக கனமில்லாமல், எளிதில் இயங்கக் கூடியது , பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். இரண்டு பேர் பயணம் செய்யலாம்.
2011 நில் விற்பனைக்கு வரும் என்று அறிவித்த இந்நிறுவனம்,இந்தகாருக்கு கிடைத்த வரவேற்பையும்,எதிர்பார்ப்பையும் பார்த்து,இந்த ஆண்டே அறிமுக படுத்த முயசிக்கின்றது,விலை ஒருகோடிக்கும் சற்று குறைவு என்பதால் (தர்போது சாதரணமாக லேக்ஸ்சரிகாருகள் இந்த விலைதான் ) அதிகம் விற்பனையாகும் என்று எதிர் பார்க்க படுகின்றது.
இருநூறு கிலோ மீடர் வேகத்தில் பறக்கக்கூடியது (சென்னையில் இருந்து கன்னியா குமரிக்கு இரண்டு மணிநேரத்தில் போய்விடலாம்).
பல கார் தயாரிக்கும் நிறுவனங்கள் இதன் விற்பனை,மற்றும் மக்களிடம் இதன் வரவேற்புகள் எப்படி என்று காத்து கொண்டு இருகின்றார்கள்.
இதற்க்கு நல்ல வரேவேற்பு மக்கள் மதில் இருக்கும் பட்சத்தில் பல நிறுவனங்கள் இத்தகைய கார்களை தயாரிக்கும் என்றும், அப்படிபோட்டிகள் அதிகரிக்கும் பட்சத்தில் நடுத்தர வர்கத்தினர் வாங்ககூடிய விலைக்கு வந்து விடும் என்று கூறுகின்றார்கள்.
வுலக அளவில் பெருகிவரும் (தரையில்) போக்குவரத்து நெரிசல்கள் இத்தகைய காருகள் வரவால் மிக பெரிய அளவில் குறையும் என்று கணிக்க படுகின்றது.
1
2
3
மஜீத் குவைத்.
No comments:
Post a Comment