Friday, February 26

டென்ஷன் முதுகு வலி


இறைவனின் பெயரால்,

டென்ஷன் அதிகமானால் தலைவலி வருமுனு தெரியும் ஆனா டென்ஷனால முதுகு வலியும் என்று மருத்துவர்கள் சொல்கின்றார்கள் டென்ஷன் தலை வலி போல டென்ஷன் முதுகு வலி என்று ஒரு வகை இருக்கிறதாம். இந்த முதுகு வலி ஆண்-பெண் என்று பார்ப்பதில்லை. அளவுக்கு மீறிய வேலைகளைச் சுமந்துகொண்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிற அனைவருக்கும் முதுகு வலி வரும்.

குழந்தைகளை அவசர அவசரமாகக் கிளப்பி, சமைத்து, ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, கணவரை ஆபிஸ்க்கு அனுப்பிவிட்டு, எல்லா வேலைகளும் முடிந்ததும் டி.வி முன்னால் உட்காரும் குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த சில நிமிடங்களில் முதுகு வலி பிண்ணி எடுக்கும். இதேபோல காலையில் அவசர அவசரமா ஓடி பஸ்ஸைப் பிடித்து வேலைக்குப் போகும் ஆண்கள் ஆபிஸ் சீட்டில் உட்கார்ந்ததும் முதுகு வலி வரும்.

ஏதோ தப்பாக உட்கார்ந்ததால்தான் முதுகு வலி என எலும்புநோய் நிபுணரிடம் நடையாக நடப்பார்கள். எக்ஸ்&ரே, ஸ்கேன் எது எடுத்துப் பார்த்தாலும் முதுகில் என்ன பிரச்னை என்று புரியாமல் தவிப்பார்கள். ஆனால் காரணமோ வேறு. தோள்பட்டை, மார்பு, இடுப்பு, வயிறு என எல்லாப் பகுதி தசைகளும் முதுகோடு இணைந்திருக்கின்றன. அரக்கப்பரக்க வேலை செய்யும்போது இந்தத் தசைகள் இறுகிவிடுகின்றன. வேலை முடிந்து ரிலாக்ஸாகும்போது, இவை இறுக்கம் தளர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பப் பார்க்கின்றன. இதன் விளைவே முதுகு வலி.வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது, கவுன்சலிங் ஆகியவைதான் இந்த முதுகு வலிக்கான சரியான சிகிச்சை.
அன்புடன் மஜீத் .

No comments:

since 23-07-2010

free counters