இறைவனின் பெயரால் ,
புற்று நோய்க்கு புகையிலையும், உணவு முறைகளும் முக்கிய காரணமாக உள்ளன. ஆனால், சிப்ஸ் சாப்பிடுவதால் அதற்கான அபாயம் தடுக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
பொதுவாக எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் உடல் நலத்துக்கு கேடானது. ஆனால் சிப்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் தடுக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக லண்டனில் மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிப்ஸில் வைட்டமின் சி சத்து உள்ளதால், புற்றுநோயைத் தடுப்பதில் அது முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புற்றுநோய் செல்கள் வளர்வதை வைட்டமினில் உள்ள சத்துகள் தடுப்பதாகவும், ஒரு ஆப்பிள் பழம், திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின்- சி சத்தைக் காட்டிலும், 175 கிராம் சிப்ஸில் 3 மடங்கு அதிக சத்து உள்ளதாகவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வைட்டமின் பி1, பி- 6, நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்துகளும் சிப்ஸில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
வைட்டமின் சி சத்துள்ள உணவுப் பொருட்களை உண்பதால் சிலவகை புற்றுநோயில் இருந்து தப்பலாம் என்றும், அவர்களுக்கு புற்று நோய் வரும் ஆபத்து குறைவு என்றும் ஊட்டச்சத்து நிபுணர் பியானா ஹன்டர் தெரிவித்துள்ளார்.
அன்புடன் மஜீத்
No comments:
Post a Comment