Saturday, May 29

வீடு கட்ட துவங்கும் முன் (சில ஆலோசனைகள்)

 நாம் வீடு கட்ட துவங்கும் போது பல விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்



இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.

 இடத்திற்கான வரைப்படம்

இடம் வாங்கும் போது அந்த இடத்திற்கான வரைப்படம் மிக முக்கியமாகும். அந்த இடத்தின் முழுஅமைப்பையும், நீங்கள் தேர்வு செய்யும் இடத்தின் அளவையும், உங்கள் இடத்திற்கு முன், பின், இட, வலப் புறங்களின் நிலவரத்தையும், அகல நீளங்களையும் உங்கள் பார்வைக்கு வைப்பது அந்த இடத்தின் லேஅவுட் என்று சொல்லப்படும் இடத்தின் வரைப்படமாகும்.


சாலை வசதி, மின்சாரம், தண்ணீர் வசதி, மருத்துவமனை, விளையாட்டுத் திடல், பள்ளிவாசல், அருகில் உள்ள - வரவிருக்கின்ற தொழிற்சாலைகள் போன்றவைக் குறித்து விபரம் அறிதல். இவை வரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கின்றதா என்று அறிதல்.

நாம் வாங்கும் இடம் பற்றிய அறிவு மிக முக்கியம். நம் இடம் தாழ்வான பகுதியில் இருக்கின்றதா... மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குமா என்று அறிதலும் அவசியம்.

இந்த இடத்திற்கான அரசாங்க அனுமதி (விற்க - வாங்க) பெறப்பட்டுள்ளதா என்று பார்ப்பதும் நம் இடத்திற்கான சாலை வசதி (வீடு சாலையை ஒட்டி இருக்கின்றதா - தூரமா) எப்படியுள்ளது என்று கவனிப்பதும் அவசியமாகும்.

தண்ணீர் வசதி நம் இடத்தில் இருந்தாலும் அரசாங்கம் வழங்கும் தண்ணீர் வசதி இருக்கின்றதா... இல்லையென்றால் அது கிடைக்கும் வாய்ப்புள்ளதா.. என்று அறிதல்.


லீகல் ஒப்பீனியன்!!!!!வழக்குறைஞர் மூலம் பெறப்படும் தகவல்,,,

நாம் வாங்கும் இடம் விற்பவரின் சொந்த சொத்தா என்று அறிதல்.


அரசாங்கத்திலிருந்து பெறப்படவேண்டியத் தகவல்
அரசின் எதிர்காலத்திட்டங்களில் நம் இடம் இடம்பெறுகின்றதா..? உதாரணமாக அரசின் சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் நம் இடமும் அடங்குமா என்றத் தகவல்


வீடு கட்ட துவங்கும் முன்,இவற்றை கருத்தில் கொள்ளுங்கள்

வீடு கட்டத்துவங்கும் முன் நம் குடும்பத்தாருடன் ஆலோசனையில் ஈடுபடுதல். இது மிக முக்கியமாகும்.கட்டிடத்தின் அளவு தேவையானதாகவும் போதுமானதாகவும் இருக்க வேண்டும்


தேவைக்கதிகமாக கட்டப்படும் கட்டிடங்களை பராமரிக்க ஒரு பெரும் தொகை ஒதுக்கும் நிலை ஏற்படும். அல்லது பராமரிக்கப்படாமல் அவை பொலிவிழந்து போகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.



விசாரணை.


நாம் வீட்டு வேலையைத் துவங்குமுன் முடிந்த அளவு இடம் உட்பட, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் - அதன் விலைகள், வீடுகட்ட பொறுப்பேற்கும் நபர்கள் பற்றி விசாரணையில் ஈடுபடுவது முக்கியமாகும்.


முன்னேற்பாடு
வீடு கட்டத் துவங்கு முன் தேவையான முன்னேற்பாடுகளை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் இதர தகவல்கள் அனைத்தும் இதில் அடங்கும்.

நிபுணர்களின் ஆலோசனை.
நம் வீட்டுக்குத் தேவையான கட்டுமான இதர பொருட்களை வாங்குமுன் அன்றைய மார்க்கட் நிலவரம் என்னவென்பதை அறிவதும் அதற்கு அத்துறையின் நிபுணர்களை அனுகுவதும் முக்கியமாகும். வீட்டில் நமக்கு தேவை என்னவென்பதையும் நமது பொருளாதார நிலைமையையும் மறைக்காமல் நிபுணர்களிடம் சொல்ல வேண்டும். அது பலவகையில் நமக்கு உதவியாக இருக்கும். தாழ்வான பகுதி என்றால் வீட்டை உயர்த்திக் கட்டும் நிபுணரின் ஆலோசனையை ஏற்க வேண்டும். அது நம் வீட்டுக்கு தக்கப் பாதுகாப்பை ஏற்படுத்தும். அவர்களின் ஆலோசனையில் முறையான திட்டங்கள், வீட்டு அமைப்புப்பற்றிய விபரமான வரைப்படம் ஆகியவற்றை வேலையைத் துவங்குமுன் தயாரித்துக் கொள்வது சிறந்தது.
எக்காரணம் கொண்டும் சிமெண்ட்டை ஸ்டோர் பண்ணக் கூடாது. அதிகப்பட்சமாக நாம் வாங்கும் சிமண்ட் மூட்டைகளை தொண்ணூறு நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். இந்த அவகாசத்தை கடந்தால் அதன் இறுக்கம் குறைந்து விடும்.


எல்லா சிமெண்ட்களுக்கும் நல்லவைதான் முறையான கலவை கலந்து பயன்படுத்தும் போது.


உலர்ந்த மரமாக பார்த்து - சிறந்த மரத்தை தேர்வு செய்து தேவையான அளவுகளில் வேலைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ள வேண்டும்.

பெரிய அளவாகவும், அழுத்தமான கல்லாகவும் பார்த்து செங்கற்கள் வாங்குதல் முக்கியம். இவ்வாறான கற்கள் செங்கற்களின் எண்ணிக்கையையும், சிமெண்டையும், கட்டுமான கூலியையும், நம் நேரத்தையும் கனிசமான அளவு மிச்சப்படுத்திக் கொடுக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

லேபர் ஒப்பந்தக்காரர்களை தேர்வு செய்வது,,,

நேர்மையான, அனுபவமுள்ள, தான் செய்யும் தொழிலில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும் பண்புள்ள, ஆர்வத்துடனும் எல்லாத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த லேபர் ஒப்பந்தக்காரர்களை தேர்வு செய்வது மிக முக்கியம். நீங்கள் எவ்வளவு சிறந்த பொருட்களை வாங்கினாலும் அதை முறையாக பயன்படுத்தினால் தான் அதன் பயன்பாடு சிறப்பாக இருக்கும் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.


எந்தப் பொருளையும் தேவைக்கு மட்டும் வாங்குவதும், வாங்கும் பொருட்களை அந்தந்த நேரத்தில் முறையாக பயன்படுத்துவதும், ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து செயல்படுத்துவதும் நமது மொத்த செலவீனங்களிலிருந்து ஐந்து சதவிகிதத்தை மிச்சப்படுத்தி நமக்கு கொடுக்கும் என்பதை இறுதியாக கூறிக் கொள்கிறோம்

majeed kuwait.

No comments:

since 23-07-2010

free counters