Saturday, May 1

அபிரகாம் லிங்கன் (1809 - 1865)

இறைவனின் பெயரால்.

அமெரிக்காவின் 16ஆவது குடியரசுத் தலைவராக விளங்கிய ஆபிரகாம் லிங்கன் அந்த நாட்டில் தோன்றிய மிக்க புகழ் வாய்ந்த - மிகப்பெரும் போற்றுதலைப் பெற்ற  அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆவார்.

கொடிய அடிமை முறையை ஒழித்து 35,00,000 அடிமைகளுக்கு விடுதலை அளித்தது ஒரு மாபெரும் சாதனையாளர்.அமெரிக்காவின் தென் மாநிலங்கள் பிரிந்து செல்ல முயன்றதற்கு இடங்கொடாமல் அமெரிக்காவின் ஒற்றுமையைக் காப்பாற்றுவதில் வெற்றி பெற்றதை லிங்கனின் தலையாய சாதனையாகக் கூறலாம்

ஆபிரகாம் லிங்கனின் சோதனை நிறைந்த  தொடர் பயணம்.
அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியும், ஜனநாயக தத்துவத்தின் தந்தையுமான ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம்


குடும்பத்தை காப்பாற்ற உழைக்க வேண்டிய கட்டாயம்  1816

அவர் தாய் மரணம் 1818

தொழிலில் தோல்வி  1831

சட்டசபைத் தேர்தலில் தோல்வி  1832

பணி பறிப்பு  1832

தன் நண்பர்களிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த 17 வருட உழைப்பு  1833

மறுபடியும் தேர்தலில் தோல்வி  1834

திருமணம் நிச்சயம் - ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண் இறப்பு  1835

நரம்பு தளர்ச்சியில் 6 மாதம் மருத்துவமனையில் அனுமதி 1836

சபாநாயகர் தேர்தலில் தோல்வி  1838


காங்கிரஸ் தேர்தலில் தோல்வி  1843

காங்கிரஸ் தேர்தலில் தோல்வி 1848


சட்ட அலுவலர் பணிக்கு நிராகரிப்பு  1849

செனட் தேர்தலில் தோல்வி  1854

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 100 ஓட்டுக்கும் குறைபாக வாக்குச் சேகரிப்பு  1856

மூன்றாம் முறையாக செனட் தேர்தலில் தோல்வி அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு 1860
மஜீத்.

No comments:

since 23-07-2010

free counters