Monday, May 3

கசாப் வழக்கு: குற்றவாளி என தீர்ப்பு

மும்பை, மே.3 (டிஎன்எஸ்) பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் நீதிபதி தஹல்யாணி தீர்ப்பை வழங்கினார். பயங்கரவாதி அஜ்மல் கசாப் குற்றவாளி என மும்பை தாக்குதல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால், இந்தியர்களான பஹீம் அன்சாரி, சஹாபுதீன் அகமது ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பை நகருக்குள் புகுந்து வெறித்தனமாக தாக்குதல் நடத்தியதில், 25 வெளிநாட்டவர் உள்பட 166 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். 304 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில், அஜ்மல் கசாப் மீது இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது உள்ளிட்ட 85 குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. தீர்ப்பையொட்டி குற்றஞ்சாட்டப்பட்ட கசாப், பஹீம் அன்சாரி, சஹாபுதீன் அகமது ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

நாளை (மே4) கசாப் மீதான தண்டனை அறிவிக்கப்படுகிறது. (டிஎன்எஸ்)

No comments:

since 23-07-2010

free counters