Friday, April 16

ஒமர் முக்தார் வரலாறு Omar al-Mukhtar Biography

இறைவனின் பெயரால்.
    நண்பர்களே இத்தாலி நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த லிபியாநாட்டு விடுதலைக்கு இருபதாம் நுற்றாண்டின் துடக்கதில் போராடியவர்  ஒமர் முக்தார், லிபியா நாடு விடுதலை போராளி  1860ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு பள்ளிகூட ஆசிரியராக இருந்தவர்.

இத்தாலி ராணுவம் லிபியா மக்களை கொடுமை படுத்துவதை கண்டு கொதிதேளுந்தார் இதாளியர்களை லிபியாவில் இருந்து அகற்றவேண்டும் என்று ஒரு பெரும் படையை அமைக்க துவங்கினார் அப்போது அவருக்கு வயதோ அறுபது!, தன் வாழ்நாளின் கடைசி பத்து வருடத்தில் லிபியாவிடுதலைக்கு வுக்கிரமாக போராடியவர்,இத்தாலி இராணுவத்திற்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

முதல் வுலக போரின் போது இத்தாலிக்கு இவர் கொடுத்த தலைவலி மிகபெரியது இவர் அமைத்த கொரிலாபடை இன்றளவும் பிகவும் பிரபல்யம்மானது அதாவது எதிகளின் படைகளை தாக்குவதற்காக தயாராகஇருக்கும் இவர் படையினர் எதிர் தரப்பு படைகள் இவர்கள் அருகில் வந்ததும் ஏதோ பயந்து ஒடுவதைபோல் இவர்கள் குதிரைய எடுத்து கொண்டு வோடுவார்கள் குறிப்பிட்ட துளைவு சென்றதும்  எதிரிகளே நினைக்காத வண்ணம்  போன வேகத்தில் திரும்பி வந்து தாக்குவது மற்றும் சுற்றிவளைத்து தாக்குவது

ஒருகட்டத்தில் இவருடன் மல்லு கட்ட முடியாமல் இத்தாலி அரசாங்கம் இவருடன் சமாதான பேச்சு வார்த்தைகள் நடத்தியது ஆனால் இவர் அதர்க்கு வுடன்படவில்லை காரணம் ஒருபுறம் சமாதானம் பேச்சு நடத்திய இத்தாலி மறுபுறம் இவரை அளிக்க மிக பெரும் சதி தீடிகொண்டு இருந்தது அதை அறிந்து இவர் சமாதன பேசில் இருந்து வெளி ஏறி இத்தாலி படைகளை துவம்சம் செய்து கொண்டு இருந்தார் கிட்டத்தட்ட லிபியாவின் ஐந்து மாவாட்டங்களை தன் கட்டுபாடுக்குள் நான்கு ஆண்டுகளுக்கு மேல் வைத்து இருந்தார்.

இவைரை பிடிக்க இத்தாலி ராணுவம் மிக பெரும் திட்டம் தீட்டி மூன்று நாட்டில் இருந்து இராணுவ வீரர்களை வரவழைத்து கடுமையான போர்செய்து இவரை சுற்றிவளைத்து கைது செய்தது இவர்மேல் வழக்கும் தொடர்ந்தது,

ஒருகட்டத்தில் இவருக்கு பொது மன்னிப்பு தர இத்தாலி ராணுவம் தயாராக இருந்த போதும் இவர் அதை ஏற்று கொள்ள வில்லை காரணம் இவருடைய கொரில்லாபடையினை சரணடைய சொல்லி இருந்தார்கள் ஆனால் இவரோ எங்கள் சுதந்திரதின்காக போராடும் நாங்கள் இறப்போம் அல்லது வுயிர்  விடுவோம்  சரண் அடையும் பேசுக்கே இடம் இல்லை என்ற இவருக்கு இத்தாலி அரசாங்கம்1931ஆம் ஆண்டு துக்கு தண்டனை கொடுத்தது.

இன்று லிபியா சுதந்திரநாடு இவர்தான் இன்றும் லிபியாவின் தேச நாயகன் பாலைவனத்து சிங்கம் என்றெல்லாம் லிபியா மக்கள் இவரை அன்போடு இன்றும் நினைத்து பார்கின்றார்கள்.

இவருடைய கடசி பத்து வருட வரலாறை படம் எடுத்து இருக்கின்றார்கள் அதை என் முந்தின பதிப்பில் தந்து இருக்கின்றேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்,படத்தின் தொடக்கத்தில் வயோதிகராக அறிமுகம்ஆகும் இந்த ஹிரோவை பார்க்கும்போது இவர் என்ன போராடி இருக்க போறார் நம்ம மகாத்மா காந்தி மாதிரி வுண்ணா விருதம் இருந்து அல்லது பாதயாத்திரை  போயிருப்பார் என்று படத்தை பார்த்தல்!? பிரமாதம்

நாம் இதுவரை தமிழ் படங்களில் போலித்தனமான கதாநாயகர்களை பார்த்து போலித்தனமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் இது போன்ற படங்களில் வுன்மையான கதானாயகர்களையிம் பார்க்கவேண்டும் அப்போதுதான் நமக்கு வுன்மையான வீராம் பிறக்கும்.
நன்றி மஜீத்.

No comments:

since 23-07-2010

free counters