Wednesday, April 28

ஓரே சமயத்தில் பல்வேறு விண்டோக்களில் பணிபுரிய

இறைவனின் பெயரால்.
நண்பர்களே நமது கம்யூட்டரில் சிலசமயங்களில் நாம் மூன்று அல்லது நான்கு அப்ளிகேஷன்கள் திறந்து வைத்துப்பணிபுரிவோம். அந்த மாதிரியான நேரங்களில் அனைத்து விண்டோக்களையும் ஒன்றாக பார்த்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்.நான் ஓரே சமயத்தில் மூன்று விண்டோக்களை திறந்துவைத்துள்ளேன்.கீழே உள்ள படத்ததை பாருங்கள்.

 அந்த வசதி நமது கம்யூட்டரிலேயே உள்ளது. அதை எவ்வாறு பெறுவது என்று இன்று பார்க்கலாம்.டாக்ஸ்பாரில் காலியாக உள்ள இடத்தில் வைத்துகர்சரை ரைக்ட்  கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் முதலில் உள்ள Cascade Window வை தேர்வு
செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட படம் கிடைக்கும்.
நீங்கள் தேர்வு செய்தபின் கீழே உள்ளவாறு படங்கள்
கிடைக்கும். அதாவது ஒரு விண்டோவின் மீது மற்றும்
ஓரு விண்டோக்கள் அடுக்கி வைத்தது மாதிரி
விண்டோக்கள் நமக்கு கிடைக்கும்.கீழே உள்ள படத்தை
பாருங்கள்.

அடுத்துள்ள The Windows Horizontally தேர்வு செய்தபின்னர் நமக்கு
விண்டோக்கள் ஒன்றன்பின்னர் ஓன்றாக வருவதை காணலாம்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அடுத்துள்ள The Windows Vertically தேர்வு செய்தால் உங்களுக்கு

விண்டோக்கள் அடுத்தடுத்து வருவதை காணலாம்.கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
 இந்த வசதி வேறு எந்த மாதிரியான சந்தர்பங்களில்

நமக்கு பயன்படும்?. ஓரு புதிய சாப்ட்வேர் பயன்படுத்து
கின்றோம். அதில் உள்ள வழிமுறைகள் தெரியவில்லை.
அப்போது உதவிக்கு சென்று பார்ப்போம். அப்போது இந்த
அப்ளிகேஷனை முடிவிட்டு அதற்கு சென்று பின்னர்
இங்கு வந்து பார்த்துக்கொள்வோம். அந்த மாதிரியான
சமயங்களில் அதே அப்ளிகேஷனையும் திறந்து கொண்டு
உதவி விண்டோவினையும் திறந்து கொண்டு பணிபுரிந்தால்
மிகவும் உதவியாக இருக்கும். நாம் மீண்டும் பழையபடி
டெக்ஸ்டாப்பிற்கு செல்லவேண்டும் என்றால் Show the Desktop கிளிக் செய்தால் நாம்
பழையபடி டெக்ஸ்டாப்பினை பெறலாம்.
மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters