இறைவனின் பெயரால்.
நண்பர்களே அரபு நாட்டிற்கு வர நினைபோரும் சரி,அரபு நாடுகளில் பணிபுரிபோருக்கும் சரி மிகப்பெரிய தலைவலி ஒன்று வுள்ளது என்றால் அது அரபு மொழி பேசுவதுதான்,
அரபு நாட்டிற்கு வர என்னும் நம்மவர்கள் ஆங்கிலம்,இந்தி,அரபு,இந்த மூன்று மொழியிலும் நல்ல பேசுபவராக இருந்தால்தான் வெற்றிபெற முடியும்,குறைந்த பட்சம் இவை மூன்றில் ஒன்றாவது கொஞ்சமாவது தெரிந்து கொண்டு வருவதுதான் சிறந்தது,அரபு நாட்டிற்கு வந்த பிறகு இந்த மொழிகளை கற்க பல இடம் இருக்கின்றது அவைகளில் சேர்ந்து விரைவில் மொழி தேர்ச்சி அடைந்தால்தான் வேலையில் வுயர் இடத்தை பெறலாம்
நமது நாட்டைபோல் அரபு நாடுகளிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகின்றது ஒரு வேலைக்கு நூறுபேர் வின்னபிப்பது இங்கு தற்போது சாதாரணம் ஆகிவிட்டது போட்டிகள் நிறைந்த இந்த பூமியில் நமக்கு அணைத்து தகுதிகளை விட மொழிக்கே இங்கு முக்கியத்துவம் தருகின்றார்கள் அதுனாலதான் படிப்பறிவு குறைவாக இருந்தாலும் அரபி நன்றாக பேசுவதால் பல அரபு நாட்டு நண்பர்கள் நம்மவர்களைவிட நல்ல சம்பளத்துடன் இருப்பதை பார்க்க முடிகின்றது.
பொதுவாக கம்பெனியில் வேலை செய்ய ஆங்கிலம் சுமாராக தெரிந்தால் போதும் என்றாலும் தலைமை பொறுப்பில் இருபவர்கள் அரபியர்களாக இருப்பதால் பழகுவதற்கு அரபி மிக அவசியம் அரபி நன்றாக பேசினால் மட்டும் போதாது எழுதவும் தெரிந்து கொள்வது அவசியம்(நமக்கு அரபி பேசதெரியாது என்றால் வுடன்வேலை செய்யும் அரபியர்கள் அவர்கள் ஏதேனும் தவறு செய்தால் பலியை நம்மேல் போட்டு விடுவார்கள் நமக்கு அரபிதேரியாததால் தலைமைஅதிகாரி அரபியில் கேட்டும் கேள்விக்கு நாம் முழிக்க நாம்தான் தவறு செய்தோம் என்று ஆகிவிடும் இது அரபு நாட்டில் பனி புரியும் நம்மவர்கள்பலர் அனுபவித்து இருப்பார்கள்)
எனவே அரபு நாட்டில் பனி புரிய இந்த மூன்று மொழிகளும் அவசியம் அந்த வகையி நாம் தற்போது பார்க்க இருப்பது அரபு மொழி, இத்தளம் சென்று அரபு மொழியை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்,அடுத்து என்பதிபுகளில் கொஞ்ச கொஞ்சம்மாக அனைத்துஅரபு மொழியையும் கத்துவிடுவோம் இங்கு மற்றும் இங்கு மற்றும் இங்கு கடைசியாகவுள்ளது இலவசம்தான் ஆனால் பணம் கட்டினால் இன்னும் சிறப்பாக கற்று தருவார்கள் முதலில் இருக்கும் இரு தளங்கள் மிகவும் எளிமையாக வுள்ளது அடிபடையை மட்டு கத்து கொள்ளுங்கள் மேற்கொண்டு அடுத்த பதிப்புகளில் இன்னும் சிறப்பாக பாப்போம்.
1
2
3
4
5
அன்புடன் மஜீத் குவைத்.
1 comment:
அன்பு நண்பரே,வணக்கம்.தங்களது பதிவில் அரபிக் மொழி கற்றுக்கொடுப்பது பற்றி அறிந்தேன்.அரசுப் பேருந்து ஓட்டுனராக இருந்தாலும்.அரபிக் மொழி கற்க ஆவலாக இருப்பதால் தங்களது பதிவு எனக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.நன்றிங்க! என Parames Driver http://konguthendral.blogspot.com
Post a Comment