இறைவனின் பெயரால்!!!!!!!!!!
தந்தை பெரியார் வலைக்காட்சியகம் சார்பில் ஒரு அருமையான குறும்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். புனிதம் என்று பெயர் வைத்திருக்கும் இந்தக்குறும்படத்தை சகோ.தளபதி ராஜ் அவர்கள் இயக்கியிருக்கிறார்கள். மிக எளிமையான சம்பவங்களை வைத்து அமைத்துள்ள இந்தப்படம் அருமையாக ஒப்பீடு காட்டுகிறது.
மாட்டுச்சாணத்தை விட, காக்கையின் எச்சத்தை விட ஒரு சூத்திரனின் கைவிரல் கொடுமையானது தா எனக்கேள்வி கேட்டு சவுக்கடி கொடுக்கிறது இந்தப்படம். அத்தோடு நீங்களெல்லாம் கோயிலுக்குள் வந்தால் புனிதம் கெட்டுவிடும் என சொல்லிவிட்டு சமீபத்தில் கோயிலுக்குள் நடந்த புனிதச் சம்பவத்தையும் சேர்த்து தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
நம் மனதில் ஒட்டியிருக்கும் அழுக்கைக் கழுவுவதற்காக,இந்த புனிதம் குறும்படம்
என் பழைய பதிப்பில் தந்தை பெரியார் அவர்கள் தீண்டாமை நீங்க இஸ்லாமே தீர்வு என்று ஆற்றிய வுரையை தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து ஆடியோவாக கேட்கவும்.
சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின்
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார்
இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி .
மஜீத் குவைத்.
No comments:
Post a Comment